"கணக்குகளை க்ளோஸ் பண்ணும் வாடிக்கையாளர்கள்…" அதிர்ச்சியில் வங்கிகள்

First Published Mar 12, 2017, 11:11 AM IST
Highlights
customers closing their bank accounts


வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 5000 ரூபாய் என பாரத ஸ்டேட் வங்கி நிர்ணயித்துள்ளதால் ஏராளமானோர் தங்களது வங்கிக் கணக்கை குளோஸ் பண்ணி வருகின்றனர்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி, தங்கள் வங்கியில், 5,000 ரூபாய்க்கு குறைவாக இருப்பு தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த அவ்வங்கியின் , கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர், தங்களது வங்கி கணக்கை குளோஸ் பண்ண முடிவெடுத்துள்ளனர். 

அதே நேரத்தில் வங்கிகளில் குறைந்த அளவு இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம், கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருக்கும், பாரத ஸ்டேட் வங்கியை விமர்சித்து, சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் படுபயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்,

சில வாடிக்கையாளர்கள் தங்களது பேஸ்புக். மற்றும் டுவிட்டர் பக்கங்களில் , 'நான், எஸ்.பி.ஐ., வங்கி கணக்கை மூட முடிவெடுத்துள்ளேன். அப்போ நீங்க...' என, எழுதிய பதாகைகளை ஏந்தி நிற்பது போன்று பதிவிட்டுள்ளனர்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருவர் , 'நான் வங்கி கணக்கை மூடிவிட்டேன்' என்ற பதாகையை, எஸ்.பி.ஐ., வாசலில் ஏந்தியபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது போன்ற கடும் எதிர்ப்பால் தாங்கள் வெளியிட்ட அறிவிப்புகளை திரும்பப் பெறுவது குறித்து பாரத ஸ்டேட் வங்கிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

click me!