16 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு..!? என்ன சொல்ல போகிறார் முதல்வர்..?!

 
Published : Feb 07, 2018, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
16 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு..!? என்ன சொல்ல போகிறார் முதல்வர்..?!

சுருக்கம்

edapdi palanisami going to celebrate one year completion of cm post on 16 th

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்று வரும் 16 ஆம் தேதியுடன்  நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி பல  முக்கிய  அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல்  கசிய தொடங்கி  உள்ளது.

சட்டசபையில் கடந்த ஆண்டு 18-ந்தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது. பிப்ரவரி 20-ந்தேதி முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து பணியை தொடங்கினார்.

கடந்த  ஓராண்டில் பல நெருக்கடிகள் வந்தாலும் அதனை  சாமார்த்தியமாக  கையாண்டு ஒரு வருட முதல்வர் பதவியை வெற்றிகரமாக  நகர்த்தி  சென்றுள்ளார் எடப்பாடி

பிளவுபட்ட அதிமுக  வை, அதாவது பன்னீர்  செல்வத்திற்கு  துணை  முதல்வர்  பதவியும், மா. பாண்டியராஜனுக்கு  அமைச்சர் பதவியும் வழங்கி, இரு அணிகளும் சேர்ந்துக்  கொண்டது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும்  எடப்பாடி முதல்வர் பதிவியை ராஜினமா  செய்ய வேண்டும் என சபாநாயகரிடம்  கடிதம் கொடுத்து,தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், 18 எம்எல் ஏக்களின் பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

ஒரு எம்எல்ஏ மட்டும் அதாவது ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம்  விளக்கம்  அளித்ததால், அவருடைய பதவி  காப்பாற்றிக்கொண்டார்

இந்நிலையில் தகுதி நீக்கம்  தொடர்பான வழக்கு  தற்போது சென்னை  உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் உள்ளது .அடுத்த  ஒரு வாரத்தில்  இதற்கான  தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு விவகாரம்,பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக், பஸ் கட்டண உயர்வு என பல்வேறு நெருக்கடிகளை கடந்து ஆட்சியை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவையும், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையும் சிறப்பாக கொண்டாட உள்ளார்.

இதற்கு முன்பாக ஒரு ஆண்டு நிறைவு விழாவையும் வருகிற 16-ந்தேதி கொண்டாட உள்ளார். அன்றைய தினம் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது  குறிப்பிடத்தக்கது

தமிழக அரசின் சார்பாக ஒரு ஆண்டு சாதனை மலர் புத்தகமும் வெளியிடவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறதாம்..

ஆக மொத்தத்தில்  ஒராண்டு நிறைவை ஒட்டி சில புதிய அறிவிப்புகளும் கோலாகலமான கொண்டாட்டமும்  இடம் பெரும் என தெரிய வந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!