
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாருக்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் 22 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தல் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா, வெளிநாடு உள்ளிட்ட இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. சேலத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்ன. அப்போது, ரயில்களை நிறுத்தப் போவதாக கூறி, ரயில் மீது ஏறி நூதன முறையில் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது ரயில் மீது ஏறிய ரயில் மீது ஏறிய இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் இந்த உயிரிழப்பு அப்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உயிரிழந்த அந்த இளைஞரின் குடும்பத்துக்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டிக் கொடுத்துள்ளார். வீடு கட்டிக் கொடுத்த ராகவாலாரன்சுக்கு, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தார், நெகிழ்ந்துபோய் நன்றி கூறி வருகின்றனர்.