
தனியார் வாகனங்களில் ரகசியமாக சென்று ரவுடிகளை சுற்றிவளைத்து கைது செய்தோம் என்று சென்னை பூவிருந்தவல்லி அருகே 72 ரவுடிகளை பிடித்தது பற்றி உதவி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சென்னையில் போலீசார் இரவு ரோந்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்பார்மர்கள் மூலம் கொலை, கொள்ளை அடிக்க ரௌடிகள் போடும் பிளான் குறித்து முன்கூட்டியே அறிந்து அதனை அதிரடி நடவடிக்கைகள் மூலம் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்த மலையம்பாக்கத்தில் தலைமறைவான ரவுடிகள் ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மலையம்பாக்கம் பகுதிக்கு சென்ற 50 க்கும் மேற்பட்ட போலீசார், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடித்து, கூத்தடித்துக் கொண்டிருந்த ரௌடிகளை சுற்றி வளைத்தனர்.
போலிசாரைக் கண்டதும் ரௌடிகள் தெறித்து ஓடத் தொடங்கினர். ஆனால் அவர்களை சுற்றி வளைத்தும் , துப்பாக்கி முனையிலும் போலீசார் கைது செய்தனர்.இதில் 72 ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் தப்பியோடினர்.
அவர்களிடம் இருந்து 8 கார்கள், 38 பைக்குகள் மற்றும் அரிவாள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனியார் வாகனங்களில் ரகசியமாக சென்று ரவுடிகளை சுற்றிவளைத்து கைது செய்தோம் என்று சென்னை பூவிருந்தவல்லி அருகே 72 ரவுடிகளை பிடித்தது பற்றி உதவி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
2 உதவி ஆணையர்கள், 10 ஆய்வாளர்கள் மற்றும் 15 உதவி ஆய்வாளர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தப்பியோடிய பீனு, கனகு, விக்கி ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
ரவுடிகளை ஏ,பி,சி என தரம் பிரித்து வைத்திருப்பதாகவும் இதில் 8 பேர் மீது ஏர்கனவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.