மலைகளின் அரசி என்று சொல்லப்படும் ஊட்டிக்கு செல்ல இ பாஸ் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அது நாளை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
Ooty, Kodaikanal e-pass: Mandatory from tomorrow - Important announcement : மலைகளின் அரசி என்று சொல்லப்படும் ஊட்டி மற்றும் மலைகளின் இளவரசி என்று சொல்லப்படும் கொடைக்கானல் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையில் பள்ளி விடுமுறை நாட்களில் ஏராளமானோ சுற்றுலா செல்வது வழக்கம். அதுவும் கோடையை சமாளிக்க குளிர் நிறைந்த ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளை சுற்றுலா வாசிகள் தேர்வு செய்வார்கள். அப்படி ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் முதலில் இ பாஸ் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
ரேஷன் கார்டு : ஆன்லைன் vs ஆஃப்லைன் - எதில் அப்ளே பண்ணுனா ஈஸியா கிடைக்கும்?
ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு இ பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அந்த நடைமுறை இப்போது மீண்டும் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு அமல்படுத்தப்படுகிறது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! ஏப்ரல் 30 வரை இலவசமாக பொருள் வாங்கலாம்
இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி வார நாட்களில் 6000 வானங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ பாஸ் நடைமுறையில் உள்ளூர்வாசிகளுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தான் இந்த இ பாஸ் நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
சென்னையில் சொத்துவரி செலுத்த இன்று கடைசி நாள்! தவறினால் அபராதம்!