புதுக்கோட்டையைச் சேர்ந்த நவதாரிணி என்ற 19 வயது சிறுமிக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எதற்கு தெரியுமா ? அதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த டி.நவதாரிணி என்ற 19 வயது சிறுமிக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் ஒரு மாற்றுத்திறனாளி மாணவி ஆவார். தனது கனவுகளை மேலும் தொடர மதுரை மருத்துவக் கல்லூரியில் காலடி எடுத்து வைக்க உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள் நவதாரிணியை பாராட்டினர்.
இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
நவதாரிணியின் தந்தை தனபால் கார் டிரைவராக இருக்கிறார். இவரின் தாயார் அமுதா.இவருக்கு சகோதரர் ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் அஜிதரன். இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நம்மிடம் பேசிய நவதாரிணியின் தாயார் அமுதா, ‘பிறந்தது முதல் நவதாரிணியை பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாள். என் மகள், சிறுவயதிலிருந்தே, டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவர் விளையாட்டுகளிலும் தீவிரமாக ஈடுபட்டாள்.
மேலும் ஊனமுற்றோர் விளையாட்டுகளுக்கான தேசிய போட்டிகளில் விளையாடியுள்ளார்’ என்று கூறினார். அடுத்து பேசிய நவதாரிணி, ‘மருத்துவக் கல்லூரியில் சேர ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது கிராமத்திலிருந்து காரைக்குடியில் உள்ள எனது பள்ளிக்கு 30 கிலோமீட்டர் பயணம் இருந்தது. தொடர்ந்து ஆதரவளித்த என் அம்மாவுக்கு நன்றி. எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத அறிவுறுத்தி உள்ளார். மருத்துவம் முடித்த பிறகு அதைச் செய்வேன்’ என்று நவதாரிணி கூறினார்.
இதையும் படிங்க..உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !
இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி