chembarambakkam: பொதுமக்களே உஷார்! கிடு, கிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி.! ஒரே இரவில் அதிகரித்த நீர் வரத்து

By Ajmal Khan  |  First Published Dec 4, 2023, 7:19 AM IST

மிக்ஜம் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 8ஆயிரத்து 409 கன அடி அளவிற்கு நீர் வந்துகொண்டுள்ளது. இதன் காரணமாக நீர் திறப்பு 3000 கன அடியாக உள்ள நிலையில், உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


நகர்ந்து செல்லும் புயல்

வஙு்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னையில் இருந்து 130 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீட்டர் வேகத்தில் புயலானது நகர்ந்து செல்கிறது.

Latest Videos

undefined

இந்த புயல் சென்னை ஒட்டி ஆந்திராவை நோக்கி நகர்வதால் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. கன மழையும் இரவு முழுவதும் கொட்டி வருவதால் சென்னையில் பல இடங்கள் ஸ்தம்பித்து போய் உள்ளது. கணேசபுரம், கொங்குரெட்டி, பெரம்பூர், துரைசாமி, அரங்கநாதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது மேலும் பல இடங்களில் காற்றின் வேகத்தில் மரங்களும் விழுந்துள்ளது.

செம்பரம்பாக்கத்தில் நீர் இருப்பு என்ன.?

இந்தநிலையில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாராக உள்ள ஏரிகள் அடுத்தடுத்து நிரம்பி வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது நீர்மட்டம் 21.15  அடியாக உள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு 4,242 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு முழுவதும் பெய்த கன மழையால் 8,409 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஏரியில் இருந்து வினாடிக்கு 3,009 கன அடிக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் உபரி நீர் வெளியேற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகலகூறப்படுகிறது. இதே போல பூண்டி ஏரியிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 1650 கன அடியில் இருந்து 4000கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

கொட்டித்தீர்க்கும் கன மழை... பெருங்களத்தூர் சாலையில் அசால்டாக கிராஸ் செய்த முதலை- ஒரு நொடியில் தப்பிய ஊழியர்

click me!