கொட்டித்தீர்க்கும் கன மழை... பெருங்களத்தூர் சாலையில் அசால்டாக கிராஸ் செய்த முதலை- ஒரு நொடியில் தப்பிய ஊழியர்

By Ajmal KhanFirst Published Dec 4, 2023, 6:48 AM IST
Highlights

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில், பெருங்களத்ததூர்- நெற்குன்ற்ம் சாலையில் மிகப்பெரிய அளவிலான முதலை சாலையை கடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெளுத்து வாங்கிய கன மழை

தென்மேற்கு வங்கக்கடப்பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜம்  என பெயரிடப்பட்டுள்ளது இந்த புயலானது சென்னைக்கு தேன் கிழக்கு சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.  இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது சென்னையில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நகர்ந்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றோடு கன மழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது 

Latest Videos

சாலையை கடக்கும் முதலை

இதன் காரணமாக பல முக்கிய சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்ன்ஐ புறநகர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியுள்ளதால் பாதுகாப்பிற்காக ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாம்பு, பூச்சிகள் வெளியே வரும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது உண்டு. ஆனால் தற்போது முதலை ஒன்று சாலையில் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்களத்தூர்- நெற்குன்றம் சாலையில் மிகப்பெரிய அளவிலான முதலை சாலையை கடந்து செல்லும் வீடியோ தான் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது. பரபரப்புமிக்க இந்த சாலையில் முதலை அசால்டாக நடந்து செல்வதும், அதனை காரில் இருந்து ஒருவர் படம் பிடித்துள்ளார். மேலும் அந்த முதலையை கவனிக்காமல் உணவு டெலிவரி ஊழியர் கிராஸ் செய்கிறார். அதிர்ஷடவசத்தால் அந்த ஊழியர் உயிர் தப்பியதாக நெட்டிசன்கள் கூறி வருகி்ன்றனர். 

இதையும் படியுங்கள்

Cyclone Michaung Chennai :சென்னையை மிரள விடும் மிக்ஜாம்! சூறாவளி காற்றோடு இரவு முழுவதும் வெளுத்து வாங்கும் மழை

click me!