
இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடையை கண்டித்தும் உடனே அதை திரும்பப் பெறக் கோரியும் மதுரை,திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன.
இந்நிலையில் மதுரை நெல்பேட்டைப் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாட்டிறைச்சி தடைக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் தடைச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
ஆனால் தமிழக முதலமைச்சர் இது குறித்து வாய்திக்காமல் இருப்பத ஏன் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்யதனர்.
திருச்சி பாலக்கரை பகுதியில் குவிந்த ஏராளமான பொது மக்கள் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே நீக்க வேண்டம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாடு முகமூடி அணிந்தபடி போராட்டம் நடத்தினர் . தொடர்ந்து முகமூடியுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.