கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி; விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் அழைப்பு…

 
Published : May 29, 2017, 09:36 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி; விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் அழைப்பு…

சுருக்கம்

Allow farmers to take care of vandalsoil Collector call to apply ...

சிவகங்கை

வயல்களுக்கு அருகில் உள்ள கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, வயலுக்கு வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் மலர்விழி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது

“சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைத்து கண்மாய்களிலும் வண்டல் மணல் எடுத்து தங்களது விளை நிலங்களில் இட்டு மண்வளத்தை பெருக்குவதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம்.

அந்தந்த வட்டாரத்தில் தங்கள் வயல்களுக்கு அருகில் உள்ள கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விரும்பும் விவசாயிகள் உடனடியாக அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களிடம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தங்களது விண்ணப்பங்களை சிட்டா அடங்கலுடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

தனியார் பட்டா நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய இடங்களில் கண்மாய் வண்டல் மண் இடுவதால் நிலத்தின் வளம் அதிகரிக்கப்படுகிறது.

நஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர் லோடு ஒரு ஏக்கருக்கு) என்கிற அளவிலும், புஞ்சை நிலங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடு ஒரு ஏக்கருக்கு) என்கிற அளவிலும் வண்டல் மண் எடுக்கலாம்.

எனவே, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வயலுக்கு தேவைப்படும் வண்டல் மண்ணை இட்டு மண்வளம் அதிகரித்து விளைச்சலை பெருக்கிக் கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!