
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு நாளை முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதே நேரத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள மோரா புயலால் மழை வெளுத்து வாங்கப் போகுது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் வரலாறு படைத்தது என்றே சொல்லலாம். சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு 110 டிகிரி அளவுக்கு வெயில் வொட் எடுத்தது.
இந்நிலையில் மேற்கு திசையில் இருந்து வீசும் கடல் காற்றால் தென் மேற்கு பருவ மழை நாளை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலில் கேரளாவிலும் பின்னர் படிபப்டியாக தமிழகத்திலும் இந்த மழை வெளுத்து வாங்கப் போகிறது என வானிலை ஆய்வாளர்கள் கணித்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்தமானுக்கு வடக்கே வங்கக் கடலில் உருவாகியுள்ள மோரா புயலால் கேரளா மற்றும் தமிழகத்தில் நாளை முதல் மழை வெளுத்து வாங்கப் போகுது என அறிவிக்கப்பட்டுள்ளது.