செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், தையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தன.
காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமேடையில் மாப்பிள்ளை போதையில் ரகளை ஈடுபட்டதால் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், தையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு வெகு விமர்சியாக நடைபெற்று வந்தது. அப்போது, மேடையில் மணமகன் மணமகளுடன் போதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அனைவரிடமும் அநாகரிமாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் வரவேற்பு நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தினர்.
பின்னர், பெண் வீட்டார் இந்த சம்பவம் தொடர்பாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாப்பிள்ளை குடிபோதையில் இருந்தது உறுதியானது. இதனையடுத்து, திருமணம் ஆவதற்கு முன்னதாகவே ,போதையில் ரகளையில் ஈடுபடும் இந்த இளைஞருடன் எங்கள் வீட்டு பெண்ணை கட்டிக் கொடுக்க முடியாது பெண் வீட்டார் திட்டவட்டமாக கூறியுள்ளனர். மாப்பிள்ளைக்கு அணிவித்த தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்க கை கடிகாரம் உள்ளிட்டவைகளை திரும்ப பெற்று திருமணத்தை நிறுத்தினர்.