ஜாஃபர் சாதிக் அப்துல் ரகுமான் என்ற திமுகவின் சென்னை மேற்கு அயலகப்பிரிவின் தலைவர், இந்தியா, நியூஸிலாந்து,ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகள் உட்பட சர்வேதச அளவில் போதை பொருள் தடுப்பில் ஈடுபட்ட காரணத்தால் போதை பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
போதை பொருள் வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க திமுக அரசு தவறினால், மத்திய புலனாய்வு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்புடைய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஜாஃபர் சாதிக் அப்துல் ரகுமான் என்ற திமுகவின் சென்னை மேற்கு அயலகப்பிரிவின் தலைவர், இந்தியா, நியூஸிலாந்து,ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகள் உட்பட சர்வேதச அளவில் போதை பொருள் தடுப்பில் ஈடுபட்ட காரணத்தால் போதை பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. இந்த நபர் போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை திரைப்படம், கட்டுமானம், விருந்தோம்பல் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாக ஜாஃபர் சாதிக் கூறியிருப்பது அனைத்து நாடுகளின் காவல்துறையின் துணையோடு இந்த நபரின் முழு குற்றங்களையும் கண்டுபிடிப்போம்.
இதையும் படிங்க: போதைப்பொருள் மாபியா தலைவனுக்கு அங்கீகாரம்... ஸ்டாலினும், உதயநிதியும் உடனடியாக பதவி விலகனும்- விளாசும் இபிஎஸ்
இந்த போதை பொருள் கடத்தலின் மூலம் சம்பாதித்த பணத்தில் தான் 'மங்கை' என்ற திரைப்படத்தை தயாரித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ரியல் எஸ்டேட் வியாபாரத்திலும் முதலீடு செய்ததாகவும், தமிழ் திரைப்பட துறையில் பல்வேறு பிரமுகர்கள் இந்த முதலீடுகளில் தொடர்புடையவர்கள் என்றும், சில ஹோட்டல்களை சென்னையில் இந்த போதை பொருள் வருமானம் மூலம் அமைத்துள்ளதாவும் கூறியுள்ளார்" :- போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர்.
இதை விட கேவலம் திமுகவிற்கு தேவையா? மத்திய புலனாய்வு நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தமிழக அரசு ஜாஃபர் சாதிக் அப்துல் ரகுமானுடன் தொடர்பில் இருந்த, இருக்கிற சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திரை துறையை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் உடன் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
இதையும் படிங்க: சின்னப்பிள்ளைக்கு வீடு... திமுகவின் ஸ்டிக்கர் அரசியல்... முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி!
இல்லையேல், திமுக அரசு இந்த கேவலமான, கேடுகெட்ட இழி செயலுக்கு உடந்தையாக உள்ளதாகவே கருதப்படும். இனி நாடகம் தேவையில்லை. குற்றவாளிகளை தண்டிக்க திமுக அரசு தவறினால், மத்திய புலனாய்வு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்புடைய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். போதை பொருள் சமூகத்தை, அடுத்த தலைமுறையை நாசாமக்கும் என்பதை புரிந்து கொண்டு மத்திய நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையேல், தமிழக மக்களின் கடும் வெறுப்பை, விரோதத்தை திமுக சந்திக்கும் என எச்சரிக்கிறேன் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.