அரசுப் பேருந்தில் பயணம் செய்தவரை கம்பியால் தாக்கிய ஓட்டுநர்; பேருந்தை முற்றுகையிட்ட சகபயணிகள்; போலீஸ் விசாரணை...

 
Published : Dec 16, 2017, 09:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
அரசுப் பேருந்தில் பயணம் செய்தவரை கம்பியால் தாக்கிய ஓட்டுநர்; பேருந்தை முற்றுகையிட்ட சகபயணிகள்; போலீஸ் விசாரணை...

சுருக்கம்

Driver who hit the wicket on the state bus Colleagues besieged by bus Police investigation ...

தருமபுரி

தருமபுரியில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவரை ஓட்டுநர் கம்பியால் தாக்கியதால் ஆத்திரமடைந்த சகபயணிகள் பேருந்தை முற்றுகையிட்டனர். தாக்கியதற்கான காரணம் குறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

சேலத்தில் இருந்து ஒசூர் வழியாக பெங்களூரு செல்ல அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் ரங்கராஜ் ஓட்டி வந்தார்.

இந்தப் பேருந்து தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக வந்து நின்றது. அப்போது, அப்பேருந்தில் இருந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த மாதையன் (61), என்பவர் ஓட்டுநரிடம் பேருந்து செல்லும் பாதை குறித்து விளக்கம் கேட்டாராம்.

இது தொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஓட்டுநர் திடீரென கம்பியால் மாதையனை அடித்துள்ளார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்ட, பேருந்தில் இருந்த சக பயணிகள் மற்றும் மக்கள் ஓட்டுநரின் இந்தச் செயலைக் கண்டித்து பேருந்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்த தகவல் தருமபுரி நகரப் காவலாள்ர்களுக்கு தெரிவிக்கபட்டது. அப்போது நிகழ்விடத்திற்கு வந்த காவலாளர்கள் காயமடைந்தவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக சக பயணிகள், ஓட்டுநர் ஆகியோருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!