
தமிழகத்தில் கடந்த 14 ஆம் தேதி பிற்பகல் முதல் நடைபெற்ற அரசுப்பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறப்பட்டதையடுத்து இன்று அதிகாலை முதல் அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றிருந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள், பணியில் உள்ள ஊழியர்களுக்கான மொத்த நிலுவைத் தொகையில் முதல் கட்டமாக 1,250 கோடி ரூபாயை வழங்க பேச்சுவார்த்தையில் அரசு ஒப்புக் கொண்டது.
மீதமுள்ள ரூ. 450 கோடி நிலுவைத் தொகை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து 3 நாட்களான நடைபெற்று வந்த பேருந்து வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இது தொடர்பாக வரும் 24 ஆம் தேதி மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதலே ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். பேருந்துகள் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கே வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதே போன்று தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதையடுத்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.