
ஒய்வூதிய பலன்கள் உட்பட, தங்களுக்கு சேர வேண்டிய, 7,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.இதனால் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் எம்,.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கங்த்தினர் வலியுறுத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் உடனடியாக வழங்கவும், 250 கோடி ரூபாய் 3 மாதங்களுக்குப் பிறகு வழங்குவது என்வும் என முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் தொழிற்சங்கத்தினர் தனியாக சென்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவது என தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்
இதையடுத்து 2 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று இரவு முதலே ஊழியர்கள் வேலைக்குத் திருப்புகின்றனர்.