வெள்ளத்தில் திக்கித் திணறி செல்லும் வாகனங்கள் ! இது எங்கு தெரியுமா ? ஏன் தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Jul 18, 2019, 9:38 AM IST
Highlights

இப்படி சாலை எங்கும் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடும் இடம் எது தெரியுமா ? மதுரை கோச்சடை அருகே உள்ள முடக்குச்சாலை பகுதிதான் ! இது மதுரையில் நேற்று கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

இது மழையால் ஏற்பட்ட வெள்ளம் அல்ல. மதுரை கோச்சடை முடக்கு சாலையில் நல்ல தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரை மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியப் போக்கால் தண்ணீர் குழாய் உடைந்து சாலை எங்கும் பரவிக்கிடக்கிறது தண்ணீர். பேருந்து, ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.

ஏற்கனவே காளவாசல் பகுதியில் புதிதாக பாலம் ஒன்று கட்டப்ப்ட்டு வருவதால் அப்பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இந்த வெள்ளத்தால் மேலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட சென்னை அளவுக்கு மதுரையிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. பெண்கள் காலிக்குடங்களுடன் வீதிகளில் தண்ணீர் லாரிக்காக காத்திருக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

இன்னும் சில நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால் மதுரை  முழுவதுமே தண்ணீருக்கு மிகுந்த கஷடப்படும் நிலை உருவாகும்.

இப்படி தண்ணீர் பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் 

click me!