உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தான் தொடர்ந்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12ம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017ம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு அதிமுக மாஜி எம்எல்ஏவை பாஜகவிற்கு தட்டி தூக்கிய அண்ணாமலை..அதிர்ச்சியில் எடப்பாடி
உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தான் தொடர்ந்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கடந்த மாதம் 28ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் தான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 25ஆம் தேதி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுடன் கூட்டணி பேச்சை திடீரென நிறுத்திய பிரேமலதா.. யூடர்ன் அடித்து பாஜகவிற்கு வண்டியை விட்ட தேமுதிக
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விளக்கம் கேட்டு இபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.