புதுவை சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை, வாக்குமூல ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

By Velmurugan s  |  First Published Mar 12, 2024, 5:50 AM IST

புதுவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஆவணங்களை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.


புதுச்சேரியின் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சிறுமி கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் கழித்து அதே பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து சிறுமியின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன், கருணாஸ் என இருவர் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போடுவதால் உங்களுக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? குஷ்பு சர்ச்சை பேச்சு

Latest Videos

படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையை காவல் துறையினர் திங்கள் கிழமை போக்சோ நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

காமராஜரின் பெயரை சொல்லி காங்கிரஸ் பிச்சை எடுக்கிறது - குஷ்பு பரபரப்பு பேச்ச

இந்த அறிக்கையுடன் சேர்த்து சிறுமியின் பெற்றோர், குற்றவாளிகளிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ சோதனை, சிறுமியின் உடல் எடுக்கப்பட்ட இடத்தில் இருந்த காலணி, பாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பொருட்கள், மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இடத்தில் இருந்து எடக்கப்பட்ட பொருட்கள் இவை அனைத்தும் காவல் துறை மூலம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

click me!