வயசானவங்க…கர்பிணிங்க… உடல் நலம் குன்றியோர் வராதீங்க !! அத்திவரதரை தரிசனத்தை தவிருங்கள்…

By Selvanayagam PFirst Published Jul 20, 2019, 8:24 AM IST
Highlights

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், முதியோர், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
 

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் திருப்கோவிலில் உள்ள திருக்குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து திரளானபக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். 

கடந்த 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, கனிமொழி எம்.பி.யின்  அம்மா ராஜாத்தி அம்மான் உள்ளிட்ட விஐபிக்களும் தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர்கள் கூட்ட  நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, அத்திவரதர் தரிசனத்துக்கான ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 4 மணி முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை பிடிப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றையநாளிதழ்களில் விளம்பரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே உடல் தளர்ந்த முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள்மற்றும் அவர்களை அழைத்து வருவோர் அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்வினை கூடுமானவரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!