"டாஸ்மாக்கிற்கு எதிராக போராடும் யாரையும் கைது செய்யக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
Published : May 04, 2017, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
"டாஸ்மாக்கிற்கு எதிராக போராடும் யாரையும் கைது செய்யக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சுருக்கம்

dont arrest who protest against tasmac says high court

மதுபான கடைகளை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய கூடாது என நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 500 டாஸ்மாக் கடைகளை அகற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி 500 மதுக்கடைகளும் மூடப்பட்டது.

ஏற்கனவே மறைந்த முதலமைச்சர் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.

இதையடுத்து தற்போது மூடிய டாஸ்மாக் கடைகளை பல்வேறு ஊர்களில் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் பல ஊர்களில் திறக்கப்படும் மதுக்கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மதுக்கடைகளை சூறையாடி மதுக்கடைகளில் உள்ள பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து நொறுக்கி வருகின்றனர்.

அதன்படி ஏப்ரல் 29 ஆம் தேதி திருமுல்லைவாயிலில் திறக்கபட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டாஸ்மாக் பெயர் பலகையை கிழித்து எறிந்தனர்.

தொடர்ந்து, போராடிய 21 பேரை திருமுல்லைவாயில் போலீசார் கைது செய்தனர்.

அவர்களை ஜாமீனில் விடுவிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் யாரையும் கைது செய்யக்கூடாது என நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

மேலும், டாஸ்மாக் பெயர் பலகையை கிழித்தது பெரும் குற்றமா ? என கேள்வி எழுப்பியதோடு, திருமுல்லைவாயில் ஆய்வாளர் நாளை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.  

PREV
click me!

Recommended Stories

பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!