
திருச்சி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு நிலவுகிறது.
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 500 டாஸ்மாக் கடைகளை அகற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி 500 மதுக்கடைகளும் மூடப்பட்டது.
ஏற்கனவே மறைந்த முதலமைச்சர் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.
இதையடுத்து தற்போது மூடிய டாஸ்மாக் கடைகளை பல்வேறு ஊர்களில் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு ஊர்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் பெரும்பாலான ஊர்களில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி திருச்சி அருகே மணப்பாறை அடுத்த மூக்குரெட்டி பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் சூறையாடினர்.
மதுக்கடைகளில் உள்ள மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து நொறுக்கினர்.
ஏற்கனவே சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் மதுக்கடையை பொதுமக்கள் சூறையாடியது குறிப்பிடத்தக்கது.