ஒரு நபர் தனது நாயுடன் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஒரு நபர் தனது நாயுடன் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிய தவறினால் அதற்கான அபாராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு நபர் தனது நாயுடன் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதையும் படிங்க: பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பெண் உயிரிழப்பு… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒருவர் தனது நாயையும் வாகனத்தில் அமரவைத்து செல்வதோடு தன்னை போலவே தனது நாய்க்கும் ஹெல்மெட் அணிவித்து கூட்டி செல்லும் வீடியோதான் அனைவரையும் கவர்ந்துள்ளது. டிவிட்டரில் பகிரப்பட்டிருந்த அந்த வீடியோவில் நாய் வாகனம் ஓட்டும் மனிதனின் தோள்களில் தனது இரண்டு கால்களையும் வைத்துக்கொண்டு ஹெல்மெட் அணிந்தவாறு செல்வதை காணலாம்.
இதையும் படிங்க: ஐடி ரெய்டு கேள்விகளை தவிர்க்க பத்திரிகையாளர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்த அமைச்சர், கனிமொழி
மேலும் அதனை பார்க்கும் போது ஒரு மணிதன் பின்னே அமர்ந்து செல்வதை போல் காட்சியளிக்கும். ஆனால் அருகே சென்று பார்க்கும் போதுதான் அது நாய் என்பதே தெரியும். இதனை சாலையில் சென்ற பலர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதை அடுத்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.