17 ஆடுகளை கடித்துக் குதறிக் கொன்ற வெறிநாய்…

Asianet News Tamil  
Published : Dec 12, 2016, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
17 ஆடுகளை கடித்துக் குதறிக் கொன்ற வெறிநாய்…

சுருக்கம்

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே வெறிநாய் கடித்துக் குதறியதில் 17 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பையா (33). இவர் 100–க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை பேய்க்குளத்தை அடுத்த கள்ளியடைப்பு பகுதியில் வேலி அமைத்து, ஆடுகளை இரவு நேரங்களில் பாதுகாத்து வருகிறார். ஆடுகளை தனியாகவும், குட்டிகளை தனியாகவும் கூண்டுக்குள் அடைப்பார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை அடைத்து வைத்திருந்த இடத்துக்குள் வெறி நாய் ஒன்று புகுந்துவிட்டது.

அந்த வெறிநாய் அங்கிருந்த ஆடுகளை கடித்துக் குதறியது. இதில் 17 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. மேலும் சில ஆடுகள் காயத்துடன் கிடந்தன. நேற்று காலை இதனை பார்த்து சுப்பையா அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கும், கிராம நிர்வாக அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் வந்து காயம் அடைந்த ஆடுகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார்.

இந்த பகுதியில் வெறிநாய்கள் தொல்லை உள்ளது. எனவே வெறிநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றும் திமுக! இடுவாய் குப்பை கிடங்கிற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!