
மதுரை
பணி வாய்ப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் ஆரம்பித்த உள்ளிருப்பு போராட்டம் 12-வது நாளாக தொடர்கிறது.
சென்னையில் நவம்பர் 17, 18-ஆம் தேதிகளில் மருத்துவர் பணியிட கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அரசு மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.
மாறாக, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், கார்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதுவரை இதுபோன்ற நடைமுறை கடைப்பிடிக்கபப்டவில்லை. இது அரசின் விதிமுறைகளுக்கு முரணானது. எனவே, "இந்த கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களை வெளிப்படையாக அறிவித்து இடமாறுதல் கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும்.
பணி வாய்ப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசுத் தரப்பில் எந்தவித நடவடிக்கை இதுவரையும் எடுக்கப்படாவில்லை. அதனால், இந்தப் போராட்ட்டம் 12-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்து.
மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு தங்களது போராட்டத்திற்கு வலுசேர்க்கின்றனர்.