
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மீனவர்களை மீட்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழக தொழிலாளர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் இராம்நகர் அண்ணா சிலையருகே தமிழக தொழிலாளர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். சீனிவாசன் வரவேற்றுப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "காணாமல் போன மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மீனவர்களை மீட்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிப்பது
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயற்கை பேரிடராக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் பொதுச் செயலர் தமிழரசன், இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்க பொதுச் செயலர் ஒப்புரவாளன், திராவிடர் கழக மாவட்ட இணைச் செயலர் வனவேந்தன்,புரட்சிகர தொழிலாளர் முன்னணி அமைப்பின் நிர்வாகி குறிஞ்சி உள்பட பலர் கண்டன உரையாற்றினர்.