
கரூர்
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 10-ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்தச் செய்திக்குறிப்பில், "கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உரிய படிவங்களில் விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு சரிபார்ப்புப் பணிகள் வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், வரும் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 10-ஆம் தேதி அன்று வெளியிடப்படும்" என்று அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து இருந்தார்.