மாடு முட்டியதில் காயமடைந்த குழந்தை ஆயிஷாவின் உடல்நிலை எப்படி உள்ளது.? மருத்துவர்கள் பரபரப்பு விளக்கம்

By Ajmal Khan  |  First Published Aug 10, 2023, 3:46 PM IST

பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமியை மாடு முட்டித்தள்ளிய காட்சி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமி ஆயிஷாவின் உடல் நிலையில்  நல்ல இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 


சிறுமியை முட்டி தள்ளிய மாடு

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷின் பானு, இவர் தனது 9 வயது மகள் ஆயிஷா மற்றும் 5 வயது ஆண் குழந்தையை பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது  ஆர் பிளாக் இளங்கோ தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு சென்று கொண்டிருந்த மாடு சிறுமி ஆயிஷாவை முட்டி தள்ளியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் குழந்தையை காப்பாற்ற போராடினார். ஆனால் மாடு தொடர்ந்து சிறுமியை தாக்கிக்கொண்டே இருந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கட்டையை கொண்டு மாட்டை தாக்கினார். சுமார் ஒரு நிமிடம் குழந்தையை தாக்கிய மாடு குழந்தையை விடுவித்து ஓடியது. இதனையடுத்து சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுமிக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டது. 

Tap to resize

Latest Videos

சிறுமியின் உடல் நிலை.?

இந்த நிலையில், இது தொடர்பாக சிறுமி ஆயிஷா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சக்கரவர்த்தி கூறுகையில், மாடு முட்டியதில் காயமடைந்த குழந்தை ஆயிஷா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  உடல்நிலை தற்போது  சீராக உள்ளது. அதிர்ஷ்டவசமாக உடலுக்குள் எந்த வித பெரிய பாதிப்பும் இல்லை. வெளி காயங்கள் தான் உடலில் அதிகளவு ஏற்பட்டுள்ளது.  சிறுமி ஆயிஷவின் உடல்நிலையை அடுத்த சில நாட்கள் மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணிப்பார்கள். இன்று மாலையே சிறுமி  ஆயிஷா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மாடு முட்டியதால்  குழந்தை சற்று பயந்த்தில் உள்ளார். இதன் காரணமாக  உளவியல் மருத்துவரும் குழந்தையிடம் ஆலோசனை வழங்க உள்ளதாகவும்,  சிறுமி ஆயிஷா, சாதாரணமாக பெற்றோருடன் பேசுகிறார். உணவு எடுத்துக் கொள்கிறார். சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2ஆயிரம் ரூபாய் அபராதம்

மாடு முட்டி குழந்தை அடிபட்ட சம்பவத்தில் மாட்டின் உரிமையாளர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல் பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், வீட்டில் வளர்க்கப்படும் உயிரினங்களால் ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என செ்ன்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனிடையே சென்னை  மாடு முட்டியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படியுங்கள்

பள்ளிக் குழந்தையை முட்டி தள்ளிய மாடு..! சென்னையில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை தேவை - அன்புமணி

click me!