"உழவர் உயரட்டும்.. மாற்றம் மலரட்டும்" - குடும்பத்தோடு பொங்கல் வைத்து கொண்டாடி வாழ்த்து சொன்ன அன்புமணி ராமதாஸ்!

Ansgar R |  
Published : Jan 15, 2024, 03:06 PM ISTUpdated : Jan 15, 2024, 03:07 PM IST
"உழவர் உயரட்டும்.. மாற்றம் மலரட்டும்" - குடும்பத்தோடு பொங்கல் வைத்து கொண்டாடி வாழ்த்து சொன்ன அன்புமணி ராமதாஸ்!

சுருக்கம்

Anbumani Ramadoss : முன்னாள் அமைச்சரும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தலைவருமான திரு. அன்புமணி ராமதாஸ் தனது மனைவியோடு இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான ராமதாஸ் அவர்களுடைய மகனும் முன்னாள் லோக்சபா உறுப்பினருமான திரு. அன்புமணி ராமதாஸ் இன்று தனது வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சராக பதவி வகித்தவர் திரு. அன்புமணி ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

குஷ்புவுக்கு கல்தா: பாஜகவில் இணைகிறாரா நடிகை மீனா?

லண்டன் நகருக்கு சென்று பொலிட்டிக்கல் சயின்ஸ் பயின்றவரான அன்புமணி ராமதாஸ் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தனது மனைவி சௌமியா ராமதாஸ் அவர்களுடன் இணைந்து தனது வீட்டில் பொங்கல் வைத்து அவர் கொண்டாடியுள்ளார். மேலும் அந்த நிகழ்வுகளை தனது பேஸ்புக் பக்கத்திலும் அவர் வெளியிட்டு இருக்கிறார். 

 

வெளியான அந்த பேஸ்புக் பதிவில் உலகெங்கும் உள்ள தமிழக மக்களுக்கு தன்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் பேசி அவர் "தை பிறந்தால் வழி பிறக்கும், அனைவருக்கும் இந்த நன்னாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், செல்வம் பெருகட்டும், அமைதி நிலவட்டும், உழவர் உயரட்டும், மாற்றம் மலரட்டும், தமிழ்நாடு வளரட்டும்" என்று கூறி தனது பொங்கல் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு.! அதிமுகவினருக்கு அலர்ட் கொடுத்த எடப்பாடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டெய்லி எதுக்கு இப்படி குடிச்சிட்டு வரீங்க கேட்ட காதல் மனைவி.. ஃபுல் மப்பில் பிரவீன்குமார் செய்த அதிர்ச்சி
தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்