தமிழ்நாட்டுல எங்கு எல்லாம் மழை பெய்ய போகுதுன்னு தெரியணுமா? அப்போ இந்த மேப்ப பாருங்க!

By manimegalai aFirst Published Oct 31, 2018, 11:21 AM IST
Highlights

வெதர்மேன் வெளியிட்டுள்ள வரைப்படத்தில், பச்சைநிறக் குறியிடப்பட்டுள்ள இடங்களில் அதிக மழையளவு பெய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யத் துவங்கம் என்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமாகும் தமிழக வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடைகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான சாரல் மழை தொடங்கியுள்ளது.

நாளை மறுநாளும் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைகிறது. படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழக வெதர்மேன், தெற்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமாகும் என்று எச்சரித்துள்ளார். வெதர்மேன் வெளியிட்டுள்ள வரைப்படத்தில், பச்சைநிறக் குறியிடப்பட்டுள்ள இடங்களில் அதிக மழையளவு பெய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

tags
click me!