தமிழகதிற்கு சொந்தமான தண்ணீரை கர்நாடக அணைகளில் தேக்கிவைக்க கூடாது – நல்லசாமி

 
Published : Oct 20, 2016, 08:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
தமிழகதிற்கு சொந்தமான தண்ணீரை கர்நாடக அணைகளில் தேக்கிவைக்க கூடாது – நல்லசாமி

சுருக்கம்

தினம் தோறும் நீர் பங்கீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே காவிரி நதி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் நல்லசாமி தெரிவித்தார்.

சேலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் செயலாளர் நல்லசாமி பேசும்போது,

தமிழகதிற்கு சொந்தமான தண்ணீரை கர்நாடக அணைகளில் தேக்கிவைத்து அவர்கள் பாசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு போகதிற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பொய்த்து போனதாக வேதனை தெரிவித்தார்.

மாதம் தோறும் நீர் பங்கீட்டு முறையை மாற்றி அமைத்து தினம் தோறும் நீர் பங்கீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே காவிரி நதி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் என்பதால் நீதிமன்றமும் மத்திய மாநில அரசுகளும் இதனை கவனத்தில் கொண்டு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு சொந்தமான நீரை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நல்லசாமி கோரிக்கை விடுத்தார்.

 

PREV
click me!

Recommended Stories

ஓயாமல் ஊத்தப்போகுதாம் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு