திருநங்கைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கூடாது – சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…

 
Published : Jun 30, 2017, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
திருநங்கைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கூடாது – சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…

சுருக்கம்

Do not provide housing for pedestrians - villagers who have been blocked by road ...

விழுப்புரத்தில் அரசு புறம்போக்கு இடத்தை திருநங்கைகளுக்கு வீட்டு மனைக்கு வழங்க கூடாது என்று கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே விளம்பாவூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் ஒரு ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு இடம் உள்ளது.

இந்த இடத்தை அரசு பள்ளிக்கு பயன்பெறும் வகையில் பயன்படுத்துவது என்று விளம்பாவூர் ஊராட்சியில் நடந்தக் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த இடத்தை திருநங்கைகளுக்கு வீட்டு மனைப்பட்டாவாக வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று இடத்தை பார்வையிட்டுச் சென்றனர்.

இந்த இடத்தில் திருநங்கைகளுக்கு பட்டா வழங்க கூடாது என்றும், ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கே வழங்கிட வேண்டும் என்றும் கூறி கிராம மக்கள் நேற்று மதியம் விளம்பாவூர் கிராமத்தில் பள்ளியின் முன்பு கள்ளக்குறிச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “பள்ளிக்கு அருகே உள்ள இடத்தில் திருநங்கைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது” என்று கூறி முழக்கங்களை எழுப்பினர். மேலும், “தாசில்தார் அல்லது கோட்டாட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் மறியலை கைவிடுவோம்” என்று கிராம மக்கள் அடம்பிடித்தனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அதிகரிகள் யாரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதையடுத்து உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நீங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே மறியலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?