
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலத்தோடு உள்ளார் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க காவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள19 சிறப்பு காவல் படைக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகமே பெரும் பரபரப்பில் காணப்பட்டது.
ஏன் இந்த திடீர் உத்தரவு என பலரும் குழம்பி வந்தனர். பொதுவாகவே முக்கிய சமபவங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் தான் இது போன்ற ஒரு அறிவிப்பு வெளியாகும்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு. கருணாநிதி குறித்தும் சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தன.
தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், கருணாநிதி உடல் நலத்துடன் உள்ளார் என்றும் அவரின் மகளும், எம்.பி.யுமான கனிமொழி கூறியுள்ளார்.