
சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகரில் இருந்து பிராட்வே செல்லும் சாலையில் மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பதையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தாறுமாறாக ஓடியது.
இதைபார்த்த வாகனவாசிகள் அதிர்ச்சியில் தலை தெறிக்க ஓடினர். இதையடுத்து பேருந்து சுரங்கப்பாதை சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த 10 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.