பரபரப்பு !! கல்வெட்டு வைப்பது தொடர்பாக தகராறு.. திமுக வார்டு உறுப்பினர் மீது வீடு புகுந்து தாக்குதல்..

By Thanalakshmi VFirst Published Oct 6, 2022, 3:34 PM IST
Highlights

காஞ்சிரம் மாவட்டத்தில் புதிய அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைத்ததது தொடர்பாக எழுந்த தகராறில் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், திமுக வார்டு உறுப்பினரின் வீடு புகுந்து தாக்கியதில் 6 பேர் காயமடைந்து அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

காஞ்சிரம் மாவட்டத்தில் புதிய அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைத்ததது தொடர்பாக எழுந்த தகராறில் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், திமுக வார்டு உறுப்பினரின் வீடு புகுந்து தாக்கியதில் 6 பேர் காயமடைந்து அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காஞ்சிரபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மசமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் புல்லட் தீனா என்னும் தேவேந்திரன். இங்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சுமார் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

இதனை அந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி திறந்து வைக்க இருந்ததால், அங்கன்வாடி மையத்தில் பெயர் பலகை கல்வெட்டு அமைக்குமாறு 8 வது வார்டு திமுக உறுப்பினர் பிரியா என்பவரின் கணவர் அம்சநாதர் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:பேருந்தில் எத்தனை மகளிர் இலவசமாக பயணித்துள்ளார்கள் தெரியுமா..? போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய தகவல்

இதனையடுத்து புதிய அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டு, சட்டபேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை திறந்து வைத்துள்ளனர். இந்நிலையில் கல்வெட்டு வைத்தது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவருக்கும் வார்டு உறுப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தேவேந்திரன் நண்பர்கள் அம்சநாதனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வீடு திரும்பியுள்ளார். 

மேலும் படிக்க:ஆன்லைன் ரம்மியால் பணம் இழப்பு.. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவன்..!

இதனை அறிந்த தேவேந்திரன் உறவினர்கள், அம்சநாதனின் வீடு புகுந்து அரிவாளால் வெறிக்கொண்டு தாக்கியுள்ளனர். 
இதில் அம்சநாதன், மனைவி பிரியா, மகன் ஹரிவாசு, மருமகள் ஆர்த்தி, அக்கா தேன்மொழி, தம்பி மகன் புகழ்நிதி ஆகியோர் பலத்த வெட்டு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் மற்றும் அவரது உறவினர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.கல்வெட்டு பிரச்சனை தொடர்பாக திமுக வார்டு உறுப்பினரை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!