திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி நீக்கம் உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள்! முழு விவரம் இதோ!

Published : Jan 29, 2025, 02:33 PM ISTUpdated : Jan 29, 2025, 02:37 PM IST
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி நீக்கம் உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள்! முழு விவரம் இதோ!

சுருக்கம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் ஆளுநர் பதவி நீக்கம், டங்ஸ்டன் சுரங்க ரத்துக்கு நன்றி உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிப்ரவரி 01ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராகவுட், திராவிட மாடல் அரசின் சாதனை உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 தீர்மானம்:1

ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை – அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட – ஆளுநர்களுக்கு “நடத்தை விதிகள்” உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயும் செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும்!

தீர்மானம்: 2

மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மத்திய பாஜக அரசை பணிய வைத்து  டங்ஸ்டன் கனிமச் சுரங்க எலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சர் அவர்களுக்கும் – துணை நின்ற மக்களுக்கும் நன்றி.

தீர்மானம்: 3

உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை மத்திய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 4

கூட்டாட்சி தத்துவம் – மாநில கல்வி உரிமை உயர் கல்வி அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி திமுக மாணவரணி – திமுக எம்.பி.க்கள் போராட்டம்.

தீர்மானம்: 5

சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்ப் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்.

தீர்மானம்: 6

தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய பாஜக அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்திற்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!