பிரசாரத்தின் போது திடீரென புரோட்டா மாஸ்டராக அவதாரம் எடுத்த திமுக மேயர்

கனிமொழி-யை ஆதரித்து நடந்தே சென்று வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் திடீரென புரோட்டா கடையில் நுழைந்து ஆம்லெட் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

dmk mayor jegan make parotta at election campaign in thoothukudi vel

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என மேயர் ஜெகன் தினமும், காலையும், மாலையும் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

Latest Videos

இந்நிலையில், இன்று மாலை போல் பேட்டை கிழக்கு, டிஎம்சி காலனி, ஆகிய பகுதிகளில் உள்ள வணிகர்கள், நடை பாதை கடைகள், பொது மக்களிடையே நடந்தே சென்று உதய சூரியன் சின்னத்தில்  வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அண்ணாமலையிடம் கேள்வி கேட்ட விசைத்தறி நெசவாளரை வேட்பாளர் இருக்கும்போதே தாக்கிய பாஜகவினர்

அப்போது, புரோட்டா கடையில் வாக்கு சேகரித்த அவர், திடீரென கடைக்குள் நுழைந்து புரோட்டா மாஸ்டர் போல் திடீரென முட்டை-யை உடைத்தார். பின்னர், வெங்காயத்தை போட்டு கல்லில் விட்டு இறுதியாக எண்ணெய் ஊற்றி கல்லில் போட்ட ஆம்லெட்-யை  சுட, சுட எடுத்தார். இதனை அப்பகுதி மக்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image