DMK Manifesto 2024 : திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று முதல் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் பணியை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் வந்து பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - DMKManifesto2024’ என்று கோரிக்கை மனுக்களை மக்களை நேரில் சந்தித்து பெறும் பணியை தொடங்கியுள்ளது திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு. திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, காமராஜ் கல்லூரி எதிரில் உள்ள மாணிக்கம் மஹாலில் மக்களிடம் இருந்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களை பெற்றனர்.
முதல் நாளான இன்று (05.02.24) திமுகவின் தூத்துக்குடி வடக்கு & தெற்கு, விருதுநகர் வடக்கு & தெற்கு, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச்சேர்ந்தவர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரையை ஆரவமுடன் வழங்கினர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் - அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் - அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் மஸ்தான், இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
தூத்துக்குடியில் திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைக்குழுவிடம் வாக்குச்சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தன் பெயரை வைக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரை அளித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும்.
தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக்கழகம் வேண்டும்.
சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
தனிச்சின்னம் என்ற பேச்சுக்கே இடமில்லை; இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - ஓ.பன்னீர்செல்வம்