அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் அமைச்சரிடம் மடிபிச்சை ஏந்திய ஆசிரியை - சென்னையில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Feb 5, 2024, 2:50 PM IST

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஆசிரியை ஒருவர் மடி பிச்சை ஏந்தியவாறு கோரிக்கையை முன்வைத்ததால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசு அரசாணை 243ஐ நிறைவேற்றி தந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் சார்பாக அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு முதல் நன்றி அறிவிப்பு மாநாடாக இந்த மாநாட்டை நான் பார்க்கிறேன்.

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கலைஞர் அவர்கள் உடன் ஒரு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று ஏங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இங்கு காணொளி மூலம் கலைஞர் அவர்கள் நம்மிடம் பேசுவது போல ஏற்படுத்தி இருக்கிறார்கள். உங்கள் கோரிக்கைகளில் அழுத்தம் இருந்தது, நியாயம் இருந்து என்பதை அவர் அழகாக வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக ரீதியில் அரசனை வரும் போது அதற்கு நன்றி தெரிவிக்கும் உரிமை உள்ளது போல, அதற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.

அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்

இங்கு அமர்ந்திருக்கும் ஆசிரியர்களின் மாணவனாக நானும் இங்கு வந்துள்ளேன். 53 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விடுதலை தந்த கலைஞரின் இயக்கத்தை சார்ந்தவன். பொதுவான அரசாங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் போகும் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். திசை திருப்பாமல் காலையில் இருந்து இதன் பயன்களை எடுத்துச் சொல்லி உள்ளீர்கள். அரசாணை வருகிறது என்றால் அது மாணவர்கள் எதிர்காலத்திற்கு தான் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை என்னிடம் சொல்லுங்கள் நாம் உட்கார்ந்து பேசுவோம். அதில் எதனை செய்ய முடியுமோ அதை செய்ய தயாராக இருக்கிறோம். உங்களுக்காக என்னுடைய வீட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கும். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நான் இருக்கிறேன் என்றால் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று தான் அர்த்தம். உங்களின் கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கும், நிதித்துறை அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்வேன்.

விளையாட்டு மைதான மேம்பாடு என்ற பெயரில் முறைகேடு? பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

உங்களின் கருத்து என்னவாக இருந்தாலும் என்னை நோக்கி வாருங்கள் சேர்ந்து பேசி தீர்வு காண்போம். உயர்ந்த துறையை சார்ந்த நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார். நிகழ்ச்சிக்கு பிறகு கன்னியாகுமரியில் அமைந்துள்ள கொத்தாரம்  எனும் பகுதியில் வசித்து வரும் தொழிற்கல்வி ஆசிரியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து மடி பிச்சை ஏந்தியவாறு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரியர் பணிக்கான அரசாணை வழங்கப்படவில்லை எனக்கூறி மடிப்பிச்சை கேட்டதாக ஆசிரியை விளக்கம் அளித்தார். இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

click me!