கார் விபத்தில் சிக்கிய திமுக MLA..! கையில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

Published : Jul 28, 2022, 12:21 PM ISTUpdated : Jul 28, 2022, 12:22 PM IST
கார் விபத்தில் சிக்கிய திமுக MLA..! கையில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பங்கேற்க சென்னைக்கு புறப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கார் விபத்தில் சிக்கியதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

திமுக எம்.எல்.ஏ கார் விபத்து

ஈரோடு மாவட்டம் அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், இன்று சென்னையில் பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். ரயில் மூலம் சென்னை வர திட்டமிட்டிருந்த வெங்கடாசலம் நள்ளிரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது  பவானி அருகே வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில்  வளைவில் திரும்பும்போது மழையின் காரணமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கன மழை பெய்த காரணத்தால் திடீரென பிடிக்கப்பட்ட பிரேக் வழுக்கியதாக கூறப்பட்டது. 

கள்ளக்குறிச்சி வன்முறை.. கெத்துக்கு வீடியோ எடுத்து ஸ்டேடஸ் வைத்த கலவரக் கும்பலை கொத்தாக தூக்கிய போலீஸ்

மக்களே கவனத்திற்கு !! வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மூடல்.. மீண்டும் எப்போது திறப்பு..?


மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ

இதனையடுத்து காரில் பயணம் செய்த வெங்கடாசலம், அவரது உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் காரில் சிக்கியிருந்த சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு கையில் முறிவு ஏற்பட்ட காரணத்தால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் கார் விபத்தில் சிக்கியது ஈரோடு  மக்களிடம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

செஸ் திருவிழாவில் வித,விதமான 3500க்கும் மேற்பட்ட உணவுகள்.! வீரர்களை அசரவைக்கும் தமிழக அரசு...உணவு பட்டியல் இதோ
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Tamil News Live today 06 December 2025: போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்