
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலம் 6 மாதத்திற்கு நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருந்த்து. ஆனால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றபடவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.
இதனிடையே தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக அரசு மசோதா நிறைவேற்றியது.
இந்நிலையில், உள்ளாட்சி துறை சம்பந்தபட்ட மானிய கோரிக்கை குறித்த விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.
இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை ஜூன் 30 ஆம் தேதி முதல் மேலும் 6மாத காலத்துக்கு நீட்டிப்பு செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலம் 6 மாதத்திற்கு நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.