கமிஷனர் அலுவலக வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் - தீபா ஆதரவு வழக்கறிஞரால் பரபரப்பு!!

First Published Jun 24, 2017, 3:17 PM IST
Highlights
deepa cadre subramani protest in different way


தீபாவை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தீபா பேரவையின் ஆதரவாளர் வழக்கறிஞர் ஒருவர் கமிஷ்னர் அலுவலகம் முன்பு தரையில் உருண்டு புரண்டு போராட்ட்த்தில் ஈடுபட்டார்.

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் சில பூஜைகள் செய்ய வேண்டி இருப்பதாக கூரி ஜெயல்லிதாவின் அண்ணன் மகன் தீபக் அவரது அக்காள் தீபாவை அங்கு வர சொல்லியதாக தெரிகிறது.

இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக அறிந்த தீபா செய்தியாளர்கள் இருவரை அழைத்து கொண்டு, அவரது கணவர் மாதவன் மற்றும் பேரவையின் பொதுச்செயலாளர் ராஜா ஆகியோரை அழைத்து கொண்டு அங்கு சென்றார்.

அப்போது அங்கு ராஜா மற்றும் தீபாவை சிலர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து தீபா பேரவையின் ஆதரவாளரான வழக்கறிஞர் தொண்டன் சுப்ரமணி என்பவர் கடந்த 22 ஆம் தேதிதேதி போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற போது மனுவை வாங்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன்  வழக்கறிஞர் தொண்டன் சுப்ரமணி கமிஷ்னர் அலுவலகம் முன்பு மனு கொடுக்க செல்வதாக கூறி தரையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்தினார்.

இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

click me!