பெண்கள் இரவு நேரத்தில் நடமாடகூட முடியல! திமுக கொடிதான் குற்றம் செய்ய லைசன்சா? கண் சிவந்த இபிஎஸ்!

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் தாக்க முயன்றதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

DMK flag is a license to commit crime! Edappadi Palanisamy tvk

சென்னை ஈசிஆர் சாலையில் கானத்தூர் அருகே முட்டுக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சென்ற பெண்களை திமுக கொடி கட்டிய காரில் இளைஞர்கள் சிலர் மற்றொரு காரில் துரத்திச் சென்ற வீடியோ காட்சிகள் வைரலானது. அதில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என 6 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் காரை, மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட இளைஞர்கள் துரத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.

Latest Videos

அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா? யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்?

மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image