மேயர்னா இஷ்டத்துக்கு முடிவு எடுப்பீங்களா.?? பிரியா ராஜனை அலறவிட்ட கே.கே நகர் தனசேகர்

By Ajmal KhanFirst Published Jun 28, 2022, 5:31 PM IST
Highlights

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நேரம் இல்லாத நேரம் ஒத்திவைக்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த நிலைக்குழு தலைவர் தனசேகரன், மேயர் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டத்தில் 100 தீர்மானங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேரமில்லா நேரம் இல்லாத கூட்டமாக நடந்தது. மாமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இன்று கூடிய இரண்டாவது மாமன்ற கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கியமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த பொது கழிப்பிடங்களை இடிப்பதற்கான தீர்மானம், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கண்காட்சி அமைப்பதற்கான செலவினங்கள், பள்ளிகளில் பாலியல் குழுக்கள் அமைப்பதற்கும், மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு செட் சீருடைகளை கொள்முதல் செய்யவும், அனைத்து சென்னை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இளைஞர் பாராளுமன்றம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தவும் தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.

ஓபிஎஸ் முக்கிய ஆதரவாளர்கள் மீது திடீர் வழக்கு பதிவு செய்த போலீஸ்.. என்ன காரணம் தெரியுமா?

இபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு..! ஓபிஎஸ் அணியில் இருந்து தாவிய பொதுக்குழு உறுப்பினர்கள்

தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள்

மேலும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் இடித்து புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பணியேற்பு கடிதங்கள் வழங்குவதற்கான அனுமதி கோரும் தீர்மானம், அடையாறு ஆற்றங்கரையில் மரங்கள் நட்டு இரண்டு ஆண்டுகள் பராமரிக்கும் பணிக்கு அனுமதி வழங்கும் தீர்மானமும் நிறைவேறியது. இத்துடன் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட ஒளிரும் சீருடையை கொள்முதல் செய்வதற்கு நிர்வாக அனுமதி கோரும் தீர்மானமும் சொத்துவரி பொது சீராய்விற்கான அறிவிப்பினை சொத்து உரிமையாளர்களுக்கு தபால்துறை மூலம் விநியோகம் செய்ய பணியாணை வழங்கியதற்கும் அதற்கான செலவினத்திற்கும் அனுமதி கோரிய தீர்மானம் உள்ளிட்ட 100 தீர்மானங்கள் நிறைவேறியது. அப்போது பேசிய கணக்கு நிலைக்குழு தலைவர் தன சேகரன், யாரிடமும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள் என்றும் நேரமில்லா நேரம் ஏன் நடத்தவில்லை என்று மேயர் பிரியாவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

துணை மேயர், ஆணையர், ஆளுங்கட்சி தலைவரிடம் முறையாக ஆலோசித்தே முறையாக முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றும் மாமன்றத்தில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என கூறினார். கொரோனா சூழல் காரணமாகவே நேரமில்லா நேரம் இந்த கூட்டத்தில் நடத்தவில்லையென தெரிவித்தார், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தால் அடுத்த கூட்டத்தில் நேரமில்லா நேரம் நடத்தப்படும் என்று மேயர் பிரியா பதிலளித்து கூட்டத்தை முடித்து வைத்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு மேடை அமைக்கும் பணி..! திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

click me!