காங்கிரசுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களில்லை! டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை திமுக ஊழல்! நயினார் நாகேந்திரன்!

Published : Apr 17, 2025, 02:06 PM ISTUpdated : Apr 17, 2025, 02:09 PM IST
காங்கிரசுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களில்லை! டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை திமுக ஊழல்! நயினார் நாகேந்திரன்!

சுருக்கம்

திமுக டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை ஊழல் செய்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேஷனல் ஹெரால்ட் நூதன ஊழல்

திமுக-வும் டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை ஊழல் செய்து காங்கிரசுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்து வருகிறது நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிக்கையின் AJL (Associated Journals Limited) நிறுவனத்தின் ரூ.5000 கோடி மதிப்பிலான சொத்துக்களைத் தங்கள் ஆட்சியில் அபகரிக்க முயன்ற சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நூதன ஊழலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை.

இதையும் படிங்க: தமிழகத்தின் வருங்கால முதல்வர் நயினார்! அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த பாஜக நிர்வாகிகள்!

சத்தமில்லாமல் சுருட்டிய காங்கிரஸ்

AJL நிறுவனத்திற்கு ரூ.90 கோடியைக் கடனாகக் கொடுப்பது போல் பாசாங்கு காட்டிவிட்டு பின்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன் மொத்தப் பங்குகளையும் ராகுல்காந்தியை முக்கியப் பங்குதாரராகக் கொண்ட "யங் இந்தியன்” என்ற நிறுவனத்திற்கு முறைகேடாக மாற்றியுள்ளது காங்கிரஸ். இத்தனைக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போன்றோர் பங்கு வகிக்கும் பழமையான AJL நிறுவனத்தின் சொத்துக்களையே தங்கள் ஆட்சியில் சத்தமில்லாமல் சுருட்டிய காங்கிரஸ் எத்தனை அப்பாவி மக்களின் உழைப்பையும் சூறையாடியிருக்கும்?

இதையும் படிங்க: கருணாநிதி சமாதியில் கோவில் கோபுரம்: சர்ச்சையைக் கிளப்பும் அலங்காரம்- சீறும் அண்ணாமலை

 திமுக-வும் டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை ஊழல்

அதிகாரத்தைக் கருவியாகக் கொண்டு காங்கிரஸ் தான் இத்தனை ஊழல்களில் ஊறியது என்றால், அதன் கூட்டணிக் கட்சியான திமுக-வும் டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை ஊழல் செய்து காங்கிரசுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்து வருகிறது. இப்படி மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஊழலற்ற ஆட்சியில் எங்கும் ஓடி ஒளிய முடியாது. எனவே ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!