உலகையே ஒரு நொடிக்குள் உள்ளங்கையில் பார்க்க வைக்கும் மாபெரும் சாதனையை பேஸ்ஃபுக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், டுவிட்டர், யூடூப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவில் ஐ.டி. விங் உருவாக்கப்பட்டு நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: உலகையே ஒரு நொடிக்குள் உள்ளங்கையில் பார்க்க வைக்கும் மாபெரும் சாதனையை பேஸ்ஃபுக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், டுவிட்டர், யூடூப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன.
சமுதாயத்தின் பல்வேறு நற்செயல்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. தேமுதிகவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக சமூக வலைதள அணி (DMDK IT Wing) உருவாக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட நிர்வாகிகள் இன்று (10.03.2024) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
நிர்வாகிகள் விவரம்:
1. S.செந்தில்குமார் Ex MLA - கழக சமூக வலைதள அணி செயலாளர்
2. R.அரவிந்தன் - கழக சமூக வலைதள அணி துணைச் செயலாளர்
3. K.V.மகேந்திரன்- கழக சமூக வலைதள அணி துணைச் செயலாளர்
4. A.தமிழரசன் - கழக சமூக வலைதள அணி துணைச் செயலாளர்
5. சிவக்குமார் நாகப்பன்,B.A.BL- கழக சமூக வலைதள அணி துணைச் செயலாளர்
இவர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சியடைய பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.