தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருதுநகரில் விஜயகாந்த் மகன் போட்டி!

By Manikanda Prabu  |  First Published Mar 22, 2024, 3:46 PM IST

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதி நடைபெறகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

Latest Videos

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, த்திய சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதி, திருவள்ளூரில் முன்னாள் எம்.எல்.ஏ கு.நல்லதம்பி, கடலூரில் கே.சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் சிவநேசன், விருதுநகரில் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கழற்றிவிடப்பட்ட விஜயதாரணி: பாஜகவில் சீட் மறுப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதன்படி விருதுநகர், மத்திய சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேமுதிக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலின்படி, அக்கட்சியின் நிறுவனரான மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் பாஜக, அதிமுக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவவுகிறது. பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி காங்கிரச் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் மாணிக்கம் தாக்கூர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!