பாலியல் தொந்திரவு காரணமாக வீட்டுக்கு வரவைத்து குடிபானம் கொடுத்து தனது கணவர் மற்றும் அவரது நண்பரால் கராத்தே மாஸ்டர் சென்னையில் கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ரெட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். வயது 42. இவர் செம்மனஞ்சேரியில் இருக்கும் ஒரு தம்பதிகளின் குழந்தைகளின் வீட்டுக்கு வந்து கராத்தே கற்றுக் கொடுத்து வநதுள்ளார். கடந்த மார்ச் 13ஆம் தேதி கராத்தே கற்றுக் கொடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறுதியாக லோகநாதன் செம்மனஞ்சேரியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை வைத்து காவல்துறை முதற்கட்ட விசாரணையை துவக்கினர். அப்போது தனது வீட்டுக்கு கராத்தே கற்றுக் கொடுக்க லோகநாதன் வந்ததாகவும், கற்றுக் கொடுத்தவுடன் சென்றுவிட்டதாகவும் குழந்தைகளின் தந்தை தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவரைப் பற்றி தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இவரது பேச்சில் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, இவரை தொடர்ந்து கண்காணித்து விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறை அங்கிருந்த கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது லோகநாதனின் பிணம் கிணற்றுக்குள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாக்குமூலம் அளித்த குழந்தைகளின் தாய், லோகநாதன் தனக்கு பாலியல் பலாத்காரம் கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.
பாலியல் பலாத்காரத்தை அடுத்து தனது வீட்டுக்கு குடிபானம் அருந்துவதற்கு வருமாறு அழைத்ததாகவும், இதை நம்பி வந்தவரை அவரது கணவரும், கணவரின் நண்பர்களும் இணைந்து லோகநாதனை அடித்து, கழுத்தை நெரித்து பின்னர் கிணற்றில் வீசி இருப்பதும் தெரிய வந்தது. விசாரணையை அடுத்து லோகநாதனின் உடலை கிணற்றில் இருந்து வியாழக்கிழமை காவல்துறை மீட்டது.