குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

By Raghupati R  |  First Published Oct 21, 2022, 5:28 PM IST

டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. நாளுக்கு நாள் டாஸ்மாக் வருமானமும் அதிகரித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..உணவளித்தவருக்கு கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு.. நெகிழ வைத்த சம்பவம் - வைரல் வீடியோ!

இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 24 ஆம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ

இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 23 ஆம் தேதி பிற்பகல் 6 மணி முதல் 24 ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மானாமதுரை, திருப்புவனம் ஆகியவற்றில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

click me!