
விருதுநகர்
கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டக் குழுக் கூட்டத்தில், பாக்கெட் பாக்கெட் முறையில் ரேசன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் விருதுநகரில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்டத் தலைவர் அசோகன் தலைமைத் தாங்கினார். நிர்வாகிகள் மகேஸ்வரி, விஸ்வரூப கேசவன், முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.
இதில், “காலி சாக்கு விற்பனையில் பாதிக்கப்பட்டுள்ள பாட்டகுளம், இ.ராமலிங்காபுரம், பி.ராமச்சந்திராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
ரேசன் கடைகளுக்குப் பொருடகள் விநியோகம் செய்யும்போது நகர்வு அட்டவணை முறையாக இல்லை. அதனை தெளிவாக்கி தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும்.
ஊழியர்களுக்கு வங்கி கணக்கு மூலம் மாதாமாதம் முறையான சம்பளம் வழங்க வேண்டும்.
ரேசன் கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும்.
பாக்கெட் முறையில் பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீட்டுவசதி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்தக் கூட்டத்தில், “பொது விநியோக திட்டத்தை பாதுகாப்போம்” என்பது தொடர்பான பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.